2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘தமிழர்கள் சுதந்திரத்துக்காகவே போராடுகின்றனர்’

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

தமிழர்கள் சுதந்திரத்துக்காகவே போராடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, ஆகையால் தமிழர்களின் உரிமைகள் உரித்துகள் வழங்கப்பட்டு, சுதந்திரமாக வாழக் கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன், நாட்டில் தற்போது தேர்தல் வரவிருப்பதால், பலரும் பல தீர்வுகளை முன்வைத்து பொய்களைச் சொல்வார்கள் என்பதால், சரியான முடிவை எடுத்து செயற்பட வேண்டுமெனவும், அவர் கூறினார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசலை எனும் வேலைத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட அதிபர் விடுதியை, நேற்று (09) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், தேசியப் பாடசாலைகளுக்கு கொடுக்கின்ற அத்தனையும் மாகாணப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட கவனம் செலுத்தப்பட்டு போதுமான வளங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தாம் அதிகாரங்களையும் உரிமைகளையும் உரித்துகளையும் கேட்கின்ற போது, இருக்கின்றதை பறிக்க அனுமதிக்க மு​டியாதெனத் தெரிவித்த அவர், இருக்கிறதைப் பறிப்பதை விட்டுவிட்டு, கொடக்கப்பட வேண்டியவற்றை கொடுக்க வேண்டுமென்றும் கோரினார்..

தமது பிரச்சினைக்கான தீர்வுக்காக கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தை ஆதரித்ததாகத் தெரிவித்த அவர், ஒரு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை முற்றுப்பெறாத நிலையே காணப்படுகிறதெனவும் ஆகவே அந்த நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு தமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன், ஆங்கிலேயர்கள், இந்த நாட்டிலிருந்த வெளியேறியதால் சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைத்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லையெனவும் அந்தச் சுதந்திரத்த:க்காகவே தமிழர்கள் போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .