2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தமிழீழ வரைபடத்துடன் உலா வந்த அம்பாள்

Editorial   / 2018 ஜூன் 30 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், ரொமேஸ் மதுசங்க

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவையொட்டி நேற்று (29) இரவு இடம்பெற்ற வௌிவீதி உலாவின் போது, தமிழீழ வரைபடத்துடன், அம்பாள் உலா வந்துள்ளார்.

மேற்படி ஆலயத்தின் வருடாந்த திருவிழா, கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகியது.

இதையொட்டி, நேற்றைய தினம் பூங்காவன திருவிழா நடைபெற்றது. இதன்போது ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நடைபெற்றது.

இதன்போது, வெளி வீதியில் அம்பாள் ஊர்வலம் வந்தபோது, தமிழீழ வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்தார்.

மிகப் பெரிய தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் ஊர்வலம் வந்தமையால், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.                      

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .