2025 ஜூலை 16, புதன்கிழமை

‘தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும்’

Editorial   / 2018 மே 02 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.கீதாஞ்சன்

“தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறவில்லை எனின் அது பாரிய பின்னடைவினை ஏற்படுத்தும்” என வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் மேற்கில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் நிதி உதவியில் போரில் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு வீடமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கால் நாட்டும் நிகழ்வு இன்று (02) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு விடுதலை நோக்கி போராடிய இனம் முடக்கப்பட்ட பின் மீண்டும் அகிம்சை ரீதியில் அரசியல் விடுதலையைப் பெறவேண்டுமாயின் பொருளாதாரரீதியில் முன்னேற வேண்டும். தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறவில்லையெனின் அது பாரிய பின்னடைவினை தமிழ் இனத்துக்கு ஏற்படுத்தும்.

இன்று வடக்கில் மக்களுக்கான வீட்டுத்திட்டம் புள்ளித்திட்டம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டாயமாக வீடு வழங்கப்பட வேண்டிய பல குடும்பங்களுக்கு கிடைக்காமல் போயுள்ளது. ஒரு குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போரில் இறந்து விட்ட பின்னர் அவர்களுக்கு புள்ளி இல்லாமல் செய்தது போர்தான்.

இவ்வாறு புள்ளி இல்லாமையினை காரணம்காட்டி வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் பலர் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கக்கூடிய தகுதியில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபை காணப்படுகின்றது.

இவர்களின் செயற்பாட்டின் சிறப்பு, அரசின் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாத நபரும் இதில் உள்வாங்கப்படுவார்கள். புள்ளி அடிப்படையில் அல்ல. 5 இலட்சம் ரூபாயாக இருந்தாலும் தரமான வீடுகளாக அவை காணப்படுகின்றன.

வடக்கில் வீட்டுத்திட்டம் கிடைக்காத நபர்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றது” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X