2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

‘தற்போது எந்த பிரச்சினையும் இல்லை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“தற்போது எந்த பிரச்சினையும் இல்லை” என, வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். 

வட மாகாண அமைச்சுகள் தொடர்பில் தொடர்ச்சியாக குழப்பங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று (22) கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

இதன்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டார்.  

அத்துடன், மகளிர் விவகார அமைச்சரான அனந்தி சசிதரன், கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், அமைச்சுகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.  

இதன்போது மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்தும் அமைச்சுகளின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டனவெனத் தெரிவிக்கப்படுகின்றது.  

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

“தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. முதலமைச்சர், ஆளுநரிடம் என்னை மாற்றுவதற்கான சிபாரிசுக் கடிதம் அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றேன். அதற்கான தகுந்த காரணங்கள் முதலமைச்சரால் முன்வைக்கப்படுமாக இருந்தால், ஆளுநர் என்னை மாற்றுவதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.  

“ஆகவே, சட்டத்தின்படி எல்லோரும் செயற்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார். 

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்குவதாகவும் அதுவரை அமைச்சராக யாரை நியமிப்பது என, கட்சியின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என, ஞாயிற்றுக்கிழமை (20) வவுனியாவில் அமைந்துள்ள டெலோவின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா தெரிவித்திருந்​தமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X