2025 ஜூலை 23, புதன்கிழமை

‘தலை நிமிர்ந்து வாழ வேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 06 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

"நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு புதிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டில் சமத்துவதத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி, தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார்.

இவற்றை நாம் அடைவதற்கு நாம் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டுமென்றும் சம்மந்தன் குறிப்பிட்டார்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழில் நடாத்தும் 13 ஆவது சர்வதேச மாநாட்டின் இரண்டாம் நிகழ்வு யாழ் நகரிலுள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. இதன் போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே சம்மந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .