2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தவிசாளர் நிரோஷ் கனடா பயணம்

Editorial   / 2022 ஒக்டோபர் 14 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


புலம்பெயர் தேசத்தில் வெளிவரும் கனடா உதயன் பத்திகையின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விடுமுறையில் கனடா சென்றுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை 15 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் உள்ள கெனடி மாநாட்டு நிலையத்தில் கனடா உதயன் பத்திரிகையின் சர்வதேச விருது வழங்கும் விழா மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ் விருது வழங்கும் விழாவில் விருது பெறுவதற்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷின் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கனடா சென்றுள்ளார்.
 
இன்று 13 ஆம் திகதி கனடா சென்றடைந்த அவரை கனடா உதயன் பத்திரிகையின் சிரேஷ்ட பிரதம ஆசிரியர் ஆர்.என் லோகேந்திரலிங்கம், பேராசியர் வே. சுங்கரநாராயணன் உள்ளிட்ட பிரமுகர்கள் வரவேற்றனர். இந் நிகழ்வினைத் தொடர்ந்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியுள்ள அவர் கனடாவில் உள்ள முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X