2025 மே 22, வியாழக்கிழமை

தவில் வித்துவானின் சடலம் மீட்பு

Editorial   / 2018 மே 19 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

யாழ்., நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம், இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. 

யாழ்., செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம்) வயது (66) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தையாரான இவர் கடந்த 17ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார். 

காணாமல்போனவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், இன்று காலை இவரது மனைவி யமுனா ஏரிக்கு தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், ஸ்தலத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X