2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தாமதத்தால் அநாவசிய உயிரிழப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுநீரகம் செயலிழந்த நோயாளியை, நோயாளர் காவு வண்டியில் அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டதால், அநாவசியமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு நடைமுறையில் இருந்த வேளையில் வட்டுக்கோட்டை பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுநீரகம் செயலிழந்த நோயாளியை நோயாளர் காவு வண்டியில் அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டதில் அனாவசியமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதென்றார்.

இது தொடர்பில் நாங்கள் விரிவான விசாரணையினை மேற்கொண்டிருந்தோமெனத் தெரிவித்த அவர், இவ்வாறான அவசர நிலை ஏற்படுமாக இருந்தால் 1990 என்ற இலக்கத்துக்கு அழைத்து நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு செல்லலாம் என மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோமெனவும் கூறினார்.

“அவ்வாறு அந்த இலக்தின் மூலம் உடனடியான தொடர்பினை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், 0212226666 அல்லது 0212217982 என்ற இலக்கங்களின் துணையுடன் அழைத்து, யாழ். மருத்துவ பீடத்தினரின் துணையுடன் நோயாளர்களை அழைத்துவர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X