2025 மே 19, திங்கட்கிழமை

தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண் கைது

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்ணை வட்டுகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட்டுகோட்டை கிழக்கில் வசிக்கும் நபர் ஒருவர் கடந்த வாரம் தனது மனைவியின் நகைகள் வீட்டில் இருந்து களவாடப்பட்டு உள்ளது. பகல்வேளை வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அதனை திருடி சென்று இருக்கலாம் என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று (12) முறைப்பாட்டாளரான வீட்டின் உரிமையாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட இளைஞன் ஒருவர், உங்கள் நகைகள் அனைத்தும் வீட்டு வளவினுள் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

குறித்த இளைஞன் கூறிய இடத்துக்குச் சென்று பார்த்த போது திருடப்பட்ட நகைகள் அனைத்தும் அவ்விடத்தில் கிடந்துள்ளன. அவை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாட்டாளர் அறிவித்தார்.

அதனையடுத்து குறித்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தொலைபேசி இலக்கத்துக்குரிய இளைஞரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்போது, குறித்த இளைஞன், முறைப்பாட்டாளரின் மகள் தனது காதலி எனவும், அவரே தனது தாயாரின் நகைகளை திருடி தன்னிடம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து முறைப்பாட்டாளரின் மகளை பொலிஸார் நேற்று (12) மாலை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X