2025 ஜூலை 30, புதன்கிழமை

தாயின் நகையைத் திருடிய மகன் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஜூலை 17 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முச்சக்கரவண்டி வாங்குவதற்காக, தாயின் 66,000 ரூபாய் பெறுமதியான, இரண்டு பவுண் தங்க நகைகளைத் திருடிய மகனை, இன்று (17) கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர், குறித்த தாயின் 21வயது நிரம்பிய இளைய மகன் என பொலிஸார் தெரிவித்தனர். கரணவாய் வடக்கில் வீட்டில் வைத்திருந்த இரண்டு பவுண் நகைகள் காணாமல் போனது தொடர்பில் தாய் ஒருவர் வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை, கடந்த 14ம் திகதி பதிவு செய்திருந்தார்.

வீட்டினை விட்டு வெளியில் தான் செல்லாத நேரம் பார்த்து, வைக்கப்பட்டிருந்த நகை இரண்டு திருட்டு போயுள்ளதாக தெரிவித்ததுடன், இச்சம்பவம் வீட்டுக்குள்ளேயே இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

சந்தேகத்தில் மகனின் நடவடிக்கையை அவதானித்து வந்த பொலிஸார் இன்று கையும் மெய்யுமாக பிடித்து விசாரணை செய்திருந்தனர். இதன்போது, முச்சக்கரவண்டி ஒன்று வாங்குவதற்கு பணம் பற்றாக்குறையாக இருந்த காரணத்தால் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், கைதான நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .