Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் “தாரா” குழுவைச் சேர்ந்த இருவரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து, இராச வீதியில் வைத்து நேற்று (20) கைது செய்துள்ளனர்.
வடமராட்சி, அச்சுவேலி - பத்தமேனி பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடையவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
யாழ்., இராச வீதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது, அவ்வீதி வழியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, மிகவும் சூட்சுமமான முறையில் முச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
அதனையடுத்து, இருவரையும் கைதுசெய்த பொலிஸார், பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்தபோது, அவர்களின் அலைபேசிகளில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படங்கள், வாள்களுடன் தாம் நிற்கும் படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த இரு இளைஞர்களும், வடமராட்சியை தளமாகக்கொண்டு இயங்கும் தாரா குழு எனும் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025