Freelancer / 2022 பெப்ரவரி 06 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
வடமராட்சி - கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாக நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், கரவெட்டி - கீரிப்பல்லி பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரமூர்த்தி நிதர்சன் (வயது 26) என்பவரே உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாக சகோதரனுடன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோதே திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக அவரை பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சடலம் மரண விசாரணைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
44 minute ago
49 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
17 Dec 2025
17 Dec 2025