2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

திண்மக் கழிவுகளைத் தரம் பிரிக்க நடவடிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அகற்றப்படும் திண்மக் கழிவுகள் யாவும், அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்துத் தரம் பிரிப்பதற்கு ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், குடியிருப்பாளர்கள் சிலர், தமது திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்துத் தராது, அவற்றை ஒன்று சேர்த்து வழங்குகின்றனரெனவும் அதனைவிட, பொது இடங்களில் இருந்து அகற்றப்படும் சகல திண்மக் கழிவுகளையும் ஒன்றாக்கி, அவற்றைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துத் தரம் பிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அவர் கூறினார்.

இவ்வாறு தரம் பிரிக்கப்படும் கழிவுகள், யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத்தின் காக்கைத்தீவில் உள்ள திண்மக் கழவுகள் சேகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும், தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X