Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கில், நேற்று (28) அதிகாலை 6 பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயிருந்தது.
அது தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன், 12 மணி நேரத்துக்குள் திருட்டுச் சந்தேக நபரைக் கைது செய்ததுடன், தாலிக்கொடியும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், கிளிநொச்சி - 13ஆம் கட்டையைச் சேர்ந்தவரென்றும் பொலிஸார் கூறினர்.
8 hours ago
9 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
17 Dec 2025