2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருநெல்வேலி கொள்ளையர்கள் சிக்கினர்

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், கோவில்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களில் இருவர், நேற்று  (16) மாலை, அப்பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

4 பேர் கொண்ட கொள்ளை கும்பலொன்று,  திருநெல்வேலி பகுதியில், கடந்த இரண்டு நாள்களாக, 2 கோவில்களிலும் 3 வீடுகளிலும் கொள்ளையிட்டு வந்துள்ளன.

இந்நிலையில், குறித்த கொள்ளை கும்பல், நேற்று முன்தினம் (16) மாலை, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளது.

இதன்போது, அக்கொள்ளையர்களை அடையாளம் கண்ட இளைஞர்கள், அவர்களைப் பிடிக்க முற்பட்டபோது, அதில் இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டவர்களை நையப்புடைத்த இளைஞர்கள், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X