2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

திருமுருகண்டியான் பாதமலர் நூல் வெளியீடு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - திருமுறிகண்டி பிள்ளையார் கோவில் முன்றலில், இளம் படைப்பாளி தி. தனுரதனின் திருமுருகண்டியான் பாதமலர் நூல் வெளியீட்டு விழா, நேற்று (31) நடைபெற்றது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஓட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதேயன் கலந்துகொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிட்டு வைத்தார்.

மேற்படி  நிகழ்வில் ஒட்டு சுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நல்லை ஆதின சுவாமிகள், இந்து மா மன்றத்தினர் படைப்பாளிகள், ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X