Janu / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் - நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 4 பெண்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தேர்த்திருவிழாவில் தண்ணீர் பந்தலில் பானங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது பெண் ஒருவரின் தாலிக்கொடி களவாடப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய சிலாபத்தைச் சேர்ந்த 26 வயது பெண், வவுனியாவைச் சேர்ந்த 37 வயதான பெண், மாத்தறையைச் சேர்ந்த 28 வயதுப் பெண் மற்றும் 49 வயதான இந்தியப் பிரஜை ஆகியோர் மக்களால் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025