2025 மே 12, திங்கட்கிழமை

’திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி’

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூர் கந்தன் சுவாமி கோவில்  திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையைக் கடைப்பிடித்து வழிபாடுகளில் மேற்கொள்ள முடியுமென, யாழ்.மாநகர சபை பிரதி மேயர் து.ஈசன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையில், இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கோவில் வளாகத்தில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்களைக் கண்காணிப்பதற்கு, பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள். அத்துடன் இம்முறை கோவில் திருவிழாவின் போது அன்னதானம், காவடி நேர்த்திக்கடன் போன்றவற்றுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதென்றார். 

கோவிலுக்கு வரும் பக்தர்களை மட்டுப்படுத்துவது தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் சாத்தியமாகவில்லையெனத் தெரிவித்த அவர், கோவில் வளாகத்தில் இம்முறை கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் கலை நிகழ்வுகள், சொற்பொழிவுகள் இதர சமயம் சார்ந்த பஜனை நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த அவர்,  கோவிலுக்கு வருபவர்கள் சுகாதார நடைமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாங்கள் இந்தத் தொற்று நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாமெனவும் குறிப்பாக சமூக இடைவெளியைப் பேணுதல்  மிகவும் அவசியமானதெனவும் கூறினார்.

“பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோவிலின் சுற்றாடலில் கைகளைக் கழுவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 24ஆம் திகதி கோவிலின் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

“இம்முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ். மாநகர சபைக்கு வர வேண்டிய 20 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு ஆகியுள்ளது” எனவும் அவர் கூறினார்.

தாங்கள் வருமானத்தைப் பார்க்கவில்லை மாறாக பொதுமக்களின், பாதுகாப்பு தங்களுக்கு முக்கியம். எனவே, யாழ் மாநகர சபை எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு அனைத்து பக்தர்களும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X