2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திறப்பு விழா

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம், நாவற்குழி மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர்களுக்கான கணினி ஆய்வு கூடம், இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தனின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் 2017ஆம் ஆண்டுக்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிதி ஒதுக்கீட்டில் இந்த ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது.

இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விருந்தினராகக் கலந்துகொண்டு ஆய்வு கூட்டத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் சயந்தன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X