2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திலீபனின் தூபிக்கு பொலிஸ் பாதுகாப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் வகையிலேயே, பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, நீதிமன்ற தடை உத்தரவின்றி, இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு, பொலிஸாருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு, கடந்த 15ஆம் திகதி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நல்லூர் நினைவேந்தல் தூபிக்கு சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஈகச்சுடர் ஏற்றி, திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X