2025 மே 10, சனிக்கிழமை

தீக்காயங்களுக்குள்ளான இருவர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

முள்ளியவளை பகுதியில், 21ஆம் திகதியன்று தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர், யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய செய்யது முகமது சிராஜ் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த 21ஆம் திகதியன்று, மேற்படி குடும்பஸ்தர் வீடொன்றுக்குச் சென்று, பால் காய்ச்சும் போது, மேல் தட்டில் இருந்த மண்ணெண்ணை போத்தல் தவறுதலாக அடுப்பு மீது விழுந்ததில், அவர் மீது தீ பரவியுள்ளது.

இதையடுத்து, அவர் மாஞ்சோலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, சகோதரன் திட்டியதால் தனக்குத்தானே தீ மூட்டிய குடும்பப் பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ரஜுவ்காந்த் நந்தினி தேவி (வயது 45) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவர்.

நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய சகோதரன், பிள்ளைகளை ஒழுங்கான முறையில் வளர்க்குமாறு கூறியுள்ளார். இதில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதில், மன விரக்தியில் மேற்படி பெண் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X