2025 மே 05, திங்கட்கிழமை

தீவக அபிவிருத்திக்கு ரூ. 4,700 மில் ஒதுக்கீடு

Editorial   / 2020 நவம்பர் 23 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தியை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தீவகப் பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்து வசதிகளை அதிகரித்து, அபிவிருத்திக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கும், நோக்கில் ஊர்காவற்துறை - காரைநகருக்கு இடையிலான பாலத்தினை அமைப்பதற்கும்; அராலி-குறிகட்டுவானுக்கு இடையிலான வீதியை கார்பட் வீதியாக மாற்றுவதற்குமான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் வேலைத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கை, கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப் பட்ட நிலையில், நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் குறித்த வீதி, கார்பட் வீதியாக மாற்றுவதற்காக சுமார் 3000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.  

அதேபோன்று,  ஊர்காவற்றுறை - காரைநகர் ஆகிய பிரதேசங்கள் சுமார் 500 மீற்றர் நீரேரியினால் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பிரதேசங்களை இணைக்கும் வகையில் பாலம் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் சுமார்  4700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X