Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 04 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாகவும் , 189 பேருக்கு எச்சரிக்கை படிவம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ,
“யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறைவடையவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை (02) 114 பேர் டெங்கு நோய்க்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிரதேச மட்டங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் விசேட வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அதன் போது டெங்கு பரவுவதற்கு ஏதுவான இடங்கள் அவதானிக்கப்பட்டால் , அதன் குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு , தங்கள் குடியிருப்புக்கள் மற்றும் அயல் பிரதேசங்களில் நீர் தேங்க கூடிய இடங்கள் , பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை , டெங்கு தொடர்பான தகவல்களை பெறவும் , முறைப்பாடுகளை வழங்குவதற்கும் 076 179 9901 என்ற தொலைபேசி இலக்கத்தை வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.
இந்த இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தகவல் பெறவோ முறைப்பாடுகளை வழங்கவோ முடியும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago