Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 18 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை இன்று (18) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு (17) ஏறாவூரில் இருந்து யாழ். நோக்கி வந்த தம்பதிகளின் கார், கொடிகாமம் புத்தூர் சந்திக்கு அண்மையில் பழுதடைந்துள்ளது. காரிலிருந்து இறங்கி பழுது பார்த்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களிடம் கைத்துப்பாக்கியை காண்பித்து மிரட்டி அவர்களது உடமையில் இருந்த 5 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 6 பவுண் நகைகள் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து குறித்த தம்பதிகள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அவர்கள் வழங்கிய அடையாளங்களுடாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அடையாளங்காணப்பட்ட இருவரும் வீடொன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விருவரில் ஒருவர், கடந்த செவ்வாய்கிழமை (16) மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago