2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவிலிருந்து வந்தவரால் மீண்டும் ஆபத்து

Freelancer   / 2021 டிசெம்பர் 17 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். 

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரிய அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவருக்கு மலேரியாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. 

தொற்றுக்குள்ளான நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களை  தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம்   பெற்றுச் செல்லுமாறும்  யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் அ. ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .