2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணி

Editorial   / 2018 ஜூன் 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், சொர்ணகுமார் சொரூபன், எஸ்.ஜெகநாதன்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணியொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று (11) காலை இப்பேரணி நடைபெற்றது.

யாழ் பிரதான வீதியிலுள்ள சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி பிரதான வீதியூடாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்தது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற தெற்கு மீனவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனக் கோரி மாவட்ட  செயலரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X