Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2017 நவம்பர் 09 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
“என்னை, இனவாதி எனக் குறிப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, என்னுடன் வந்து பேசுவாராயின் பலவற்றில் தெளிவடைந்து கொள்வார்” என, வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கிலுள்ள விக்னேஸ்வரன் போன்ற இனவாதிகளும் தெற்கிலுள்ள வீரவன்ச போன்ற இனவாதிகளும் இன்று ஒருமூலைக்குள் முடங்கியுள்ளனர். இந்த நிலையில், வடக்கிலும் தெற்கிலும் மூலையில் ஒதுங்கியிருக்கும் இனவாதிகளைச் சேர்த்துக்கட்டி நடுக்கடலில் தள்ளவேண்டும்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் நேற்றுப் புதன்கிழமை முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளிக்கையிலையே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கையில் எவை நடந்தவை. எதற்காக அவை நடந்தவை என்பவை தொடர்பில் நாம் கலந்தாலோசித்தால் எல்லாமே தெளிவாகும். அவர் என்னுடன் கலந்தாலோசித்தால் எனக்கு எதிராகக் குரல் கொடுக்கமாட்டார்.
“'ஏக்கிய இராச்சிய' என்பது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கும். அதன் அடிப்படையில், அரசாங்கம் தற்போது முன்வைத்துள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்குப் போதாது. சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே, தமிழ் மக்களுக்குப் போதியளவான அதிகாரங்களை வழங்கும் என்பதில் நாம் தெளிவாகவே உள்ளோம்.
“அரசாங்கம் தம்மால் வழங்கக் கூடியதையே வழங்கத் தயாராகியுள்ளது. நாம் பிரச்சினைக்குத் தீர்வைக் காணவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். பிரச்சினைகள் ஏற்பட்டதற்கான காரணங்களுக்குரிய தீர்வையே தர வேண்டும். வெறுமனே அதற்குமேல் தர முடியாது - இதற்குக் கீழ் தரமுடியாது எனக் கூறக்கொண்டிருந்தால், பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியாது.
“அரசாங்கம்தான் எமது உரிமைகளைப் பறித்தது. அவற்றைத் திருப்பித் தருவது அதன் கடப்பாடாகும். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு எது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே, தமிழ் மக்களுக்கு போதியளவான உரிமைகளை வழங்கமுடியும்.
“ஒற்றையாட்சியின் கீழ் என்னதான் நடந்தாலும் பெரும்பாண்மை மக்களின் அதிகாரம் மேலோங்கி நிற்கும். தருபவற்றை ஏதோ ஒரு காரணத்துக்காக மீளப் பெறுவதற்கு ஒற்றையாட்சி அதிகாரப் பகிர்வு வழிவகுக்கும்” என்றார்.
இதேவேளை, “தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே தற்போது செயற்பட்டுவருகின்றது. அரசியல் ரீதியாக மாறுவதாக இல்லை. தமிழ் மக்களை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. தமிழ் மக்கள் பேரவைக்குள் கருத்தொருமித்த அரசியல் கட்சிகள் உள்ளன. அவை தமது அரசியல் பணிகளை முன்னெடுக்கும். அது தொடர்பான எனது தனிப்பட்ட எண்ணத்தை என்னால் இப்போது கூறமுடியாது” எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago