2025 ஜூலை 05, சனிக்கிழமை

தேசிய போதை ஒழிப்பு நிகழ்வு

Editorial   / 2019 ஜூன் 26 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்சன்

ஐனாதிபதியின்  தேசிய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழான போதை ஒழிப்பு வாரச் செயற்பாடுகளின் நான்காம் நாளான இன்று போதை ஒழிப்புத் தொடர்பான விழப்புணர்வுப் பேரணி தென்மராட்சிப் பிரதேசத்தில் நடாத்தப்பட்டது.

பிரதேச செயலக முன்பாக பேரணி ஆரம்பித்து ஏ9 முதன்மைச் சாலை வழியாக சாவகச்சேரி பேருந்து நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து சாவகச்சேரி நகரசபை பொது விளையாட்டு மைதானம் வரை பேரணி சென்றது. பேரணியுடன்  போதை ஒழிப்பு தொடர்பான பதாகைகளுடன் பெருமளவு வாகனங்களும் பங்குபற்றின.

பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி அலுவலர்களின் போதையினால் எற்படும் விளைவுகள் தொடர்பான சிறப்பு தெரு நாடகமும் இடம்பெற்றது. 

'போதையற்ற நாட்டை உருவாக்குவோம்' 'குடி குடியைக் கெடுக்கும்' 'குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்' 'புகைப் பிடித்தால் புற்றுநோய் உண்டாகும்'; 'போதைப் பொருள் பாவனையற்ற மகிழ்ச்சியான சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்'; 'குறைந்த வயது முதுமையான தோற்றத்திற்கு காரணம் மதுசாரப் பாவனை' 'திருப்திகரமான பாலுறவுக்கு சாராயம் குடிப்பவர் தகுதியற்றவர்'; 'மதுசாரம் சிகரட் பாவனையாளருடன் வாழும் வாழ்க்கை நாற்றமான வாழ்க்கை' 'புகைத்தல் மற்றும் மதுபானத்தின் அபாயத்தினை ஒழித்து வறுமை நிலையினைக் குறைத்து அபிவிருத்தியினை மேம்படுத்துவோம்'; போன்ற வாசகங்கள் அடங்கிய  பதாகைகள் பொதுமக்களால் எடுத்துவரப்பட்டன.

இந்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,  சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன், பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன், சாவகச்சேரி மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்கள்,  பிரதேச செயலக அலுவலர்கள்  உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .