2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’தேசிய ரீதியான போராட்டத்துக்கு வடக்கின் ஆதரவும் வேண்டும்’

Niroshini   / 2021 ஜூலை 22 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

நாடு பூராகவும் அதிபர், ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவு வங்குவதாகத் தெரிவித்த இலங்கை ஆசிரியர்சேவை சங்கத்தின் செயலாளர் புயல்நேசன், அதேபோல் வடமாகாண அதிபர், ஆசிரியர்களும் குறித்த போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கூறினார்.

அதேபோல ஆசிரியர்கள், அதிபர்கள் இந்த காலத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதை தவறு என கூறுவதை  ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று  (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வடமாகாணத்தில், 13 கல்வி வலயங்கள் செயல் நிலையில் உள்ளன எனவும்  30 வருடங்களாக காணப்படுகிற சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண வேண்டுமாயின், அனைத்து ஆசிரியர்களும் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் தமக்கு அதற்குரிய பலன் கிடைக்கும் எனவும், புயல்நேசன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X