Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக கட்சியால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களாகிய நாங்கள், குறிப்பிட்ட தேர்தலில் இருந்து விலகுவதாக, நேற்று (16) ஊடகங்களில் வெளியான செய்தி, உண்மைக்குப் புறம்பானது என, சாவகச்சேரி வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி நகரசபை தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடனான இரகசிய சந்திப்பு ஒன்று, நேற்று (16) இடம்பெற்றதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில், வேட்பாளர்களான சு.சி.அருளானந்தம், க.மயில்வாகனம், கா.சற்குணதேவன், திருமதி த. பவுலினா சுபோதின், திருமதி வி.சத்தியலட்சுமி ஆகியோர் கூட்டாக இன்று (17) தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கட்சித் தலைவரோடு அவசர சந்திப்பொன்று ஏற்பாடு செய்வதற்காக என்று கூறியே, எம்மிடம் கையொப்பம் பெறப்பட்டது. இதனால் கட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மனம் வருந்துகிறோம்.
“தொடர்ந்து கட்சியின் வெற்றிக்காக உழைப்போம் என்று கட்சித் தலைமைக்கும் ஆதரவாளர்களுக்கும் இவ்வேளைகளில் தெரிவித்துக்கொள்கிறோம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago