Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 14 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
தேர்தல் நடவடிக்கைகளில், இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்களெனவும் பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்களெனவும், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வடக்குக்கு 2 நாள்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, இன்று (14), யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது, வடக்கில், தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகமாக இடம்பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறதெனவும் அதாவது வீதிகளில் வேட்பாளர்களின் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் எழுதப்படுவது இங்கே அவதானிக்க கூடியதாக இருக்கிறதெனவும் கூறினார்.
அத்துடன், இங்கே அரசாங்க நிதியில் சிர்மாணிக்கப்படும் வீதிகள், சில வேட்பாளர்களால் திறக்கப்படுகின்றனவெனத் தெரிவித்த அவர், அதனை உடனடியாக நிறுத்துமாறு, தான் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் கூறினார்.
மேலும், “தேர்தல் கடமைகளில் பொலிஸார் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் இராணுவத்தினர் எக்காரணத்துக்காகவும் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். அதாவது எமக்கு ஒரே ஒரு படத்துக்கு தான் இந்த இராணுவத்தினரை உதவி தேவைப்படுகின்றது. அதாவது தீவுப் பகுதிகளில் இருந்து விரைவாக வாக்குப்பெட்டிகளை வாக்குச் சேகரிப்பு நிலையத்துக்கு எடுத்து வருவதற்கு விமானப்படை மற்றும் கடற்படையினரின் உதவி நமக்கு தேவையாக உள்ளது. எனவே வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்துக்கு எடுக்கும் பணியில் மட்டும் இராணுவத்தினர் பயன்படுத்தபடுவார்கள். தேர்தல் கடமைகள் அனைத்திலும் பொலிஸார் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
7 hours ago
8 hours ago