Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூன் 22 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
“நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பொலிஸ் நற்சான்றிதழ்கள் கேட்க முடியாது தானே” என, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
பலவித குழப்பங்களின் பின், வட மாகாண சபையின் 97ஆவது அமர்வு, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் இன்று (22) நடைபெற்றது.
இதன்போது, நகை அடகு பிடிப்பவர்கள் தொடர்பான, நியதிச்சட்டம் இயற்றுவதற்கானக் குழு விவாதம் இடம்பெற்றது.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, “நகை அடகு பிடிப்பவர்கள், பொலிஸ் நற்சான்றிதழ் பெற்று பதிவு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், “நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களிடமே பொலிஸ் நன்சான்றிதழ் கேட்பதில்லை. இவ்வாறிருக்க அடகு பிடிப்பவர்களிடம் எவ்வாறு கேட்கமுடியும்” எனத் தெரிவித்தார்.
அதற்கு அவைத்தலைவர் சிவஞானம், “நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பொலிஸ் நற்சான்றிதழ்கள் கேட்க முடியாது தானே” எனத் தெரிவித்தார்.
15 minute ago
1 hours ago
9 hours ago
27 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
9 hours ago
27 Sep 2025