2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தையிட்டி விகாரைக்கு யாழில் ஆதரவுப் பேரணி

Freelancer   / 2023 மே 13 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும் என்ற தொனிப் பொருளில் பேரணி ஒன்று தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம் பெற்று மக்களுக்கு தானம் (மதிய உணவு) வழங்கப்பட்டது.

இதன்போது 200க்கும் மேற்பட்ட மக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாதைகளைத் தாங்கியவாறு பேரணியாக வந்தனர்.

யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விகாரைக்கு ஆதரவான பேரணியில் கருத்து தெரிவித்தல் அருண் சித்தார்த்...

இலங்கையில் அனைவரும் அனைத்து மதங்களையும் மதிக்கின்ற மத வழிபாடுகளை மேற்கொள்ளும் சுதந்திரம் உண்டு என்றும், தையிட்டி விகாரை யாழ்ப்பாண மாவட்ட வரைபடத்தில் 1959 ஆம் ஆண்டு விகாரைக்குரிய பகுதி என குறிக்கப்பட்டுள்ள நிலமாகும். 

பொதுமக்களின் காணிகள் அல்ல விகாரை அழிவடைந்த காலத்தில் பொதுமக்கள் அக்காணியை கையகப்படுத்தி தமது குடியிருப்பினை மேற்கொண்டிருந்தனர் ஆனால் அது விகாரைக்குரிய நிலமாகவே காணப்படுகிறது பொதுமக்களின் காணியில் விகாரை அமைக்கப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தினை நாட முடியும் என்றார்.

அத்துடன் ஒவ்வொரு மதத்தையும் இனத்தையும் கூறி இனவாதம் மற்றும் மதவாதத்தினை எவரும் தூண்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.- R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .