2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

’தொடர்ச்சியான மரநடுகை மகிழ்ச்சி’

Princiya Dixci   / 2020 நவம்பர் 30 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மரநடுகை நிகழ்வுகள் மகிழ்ச்சியளிக்கிறது என  மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். 

அதிகளவான மரங்கள் அழிக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது அதனை மீள் நிரப்பு செய்யும் வகையில் தொடர்ச்சியாக மரநடுகை செயற்பாடுகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

கிளிநொச்சி - பரந்தன்,  கரடிபோக்கு இணைப்பு வீதியில் ஓசியர் கடைச் சந்தியில் இன்று (30) நடைபெற்ற 12ஆவது கற்பகா திட்டத்தின் கீழ், 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மரங்களை நாட்டி, அதனை வளர்த்தெடுத்து எமது சூழலை பாதுகாக்க  வேண்டிய பொறுப்பு அனைவரினுடையது. எனவே, இச்செயற்றிட்டத்தில் நானும் கலந்துகொண்டமையிட்டு நிறைவடைகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X