2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 ஜூலை 03 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- கே.கண்ணன்

வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமையைக் கண்டித்து, அப்பாடசாலை மாணவர்கள் கறுப்பு பட்டி அணிந்து இன்று (03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், பாடசாலை சமூகம் என உரிமை கோரப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் பாடசாலை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

“வரும் முன் காப்போம்” என்று தலைப்பிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில், “இன்று (03) பாடசாலைக்கு புதிதாக வருகை தரவிருக்கும் ஆசிரியரை நிராகரிப்போம். தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம், கலவன் பாடசாலை. ஆகையால், துடிப்பும் வேகமும் நிறைந்த ஆசிரியர் தேவை. தற்போது எமது பாடசாலை தேசிய மட்ட போட்டியில் கால்பதித்து வருகின்ற நிலையில் இடமாற்றம் நிகழ்வது, விளையாட்டுத் துறையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும். அத்தோடு, புதிதாகக் கடமையை பொறுப்பேற்க உள்ள ஆசிரியர், கடந்த காலத்தில் எமது பாடசாலையில் கல்வி கற்பித்து பாடசாலை சமூகத்துடன் முரண்பட்டுச் சென்றவராகும். இந்நிலையில் எமது பாடசாலையில் மீண்டும் இடமாற்றம் வழங்குவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X