Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வட மாகாண சபையால் வழங்கப்படவுள்ள தொண்டராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா தெற்கு கல்வி வலய தொண்டராசிரியர்கள் இன்று (06) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட மாகாண சபையினால் ஆசிரியர் நியமனத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ள 182 தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், தகுதியானவர்களின் பெயர்கள் தெரிவுப்பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொண்டராசியர்களாக கடமையாற்றிய தாம் பல தடவைகள் நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றிருந்த போதிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் செல்வாக்கின் காரணமாகவே இமமுறையும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago