Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில், பல வருடங்களாக கடமையாற்றி, தற்போது இடம்பெறவுள்ள, நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாது விடுப்பட்ட தொண்டராசிரியர்கள், பத்தரமுல்ல கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நீதி கோரி சென்றுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில், சுமார் பத்து வருடங்களுக்கும் மேல், தொண்டராசிரியர்களாக கடமையாற்றிய, நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஆசிரியர் நியமனத்திற்கு, உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்படவில்லை என்றும், இதில் பல ஆசிரியர்கள் ஏற்கனவே இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகளுக்கு சென்று வந்தவர்கள் என்றும், இருப்பினும் இந்த நேர்முகத்தேர்வுக்கு, இவர்களுக்கான கடிதங்கள் அனுப்பப்படாததன் காரணமாக, தங்களுக்கு நீதிகேட்டு, மத்திய கல்வி அமைச்சின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.
இதேவேளை, குறித்த கோரிக்கை தொடர்பாக, வடக்கு மாகாண சபை செய்ய வேண்டிய பணிகளை, அவர்கள் தம்மால் செய்ய முடியாது என தங்களுக்கு அறிவித்தமையினால், மத்திய கல்வி அமைச்சினால், நேர்முகத் தேர்வுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், உண்மையிலேயே இந்தப் பணிகளை, வடக்குமாகாண கல்வி அமைச்சே பார்க்க வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொண்டராசிரியர்களின் கோரிக்கை தொடர்பில் அறிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், பத்தரமுல்ல கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று, இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனை சந்தித்து, இது குறித்து உரையாடிதோடு, நீதி கோரி சென்றுள்ள தொண்டராசிரியர்களையும் சந்தித்துள்ளார்.
இதன் போது, கருத்து தெரிவித்த அமைச்சரும், அமைச்சின் செயலாளரும், தாங்கள் விடுப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களைத் திரட்டி, அதன் உண்மைத் தன்மையினை அறிந்து, உரிய நடவடிக்கையினை எடுப்பதாகத் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், மாகாண சபைகளுக்கான அதிகார பரவலாக்கல் பற்றித் தொடர்ந்தும் பேசி வருகின்ற வடக்கு மாகாண சபையினர், கல்வி விடயம் தொடர்பில் தங்களுக்கு உள்ள அதிகாரத்தையும் மத்திக்கு வழங்கி விட்டு, தங்களை மத்திய அரசின் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டுள்ளனர் எனவும் , தங்களின் தொண்டராசிரியர்கள் தெரிவுகள், நேர்முகத் தேர்வுகள் எல்லாம் மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் குறித்த தொண்டராசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago