2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

’தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சுக்குள் கொண்டு வருவது பொருத்தமல்ல’

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. என்.ராஜ், டி.விஜித்தா

தொல்பொருள் திணைக்களத்தைப் பாதுகாப்பு அமைச்சுக்குள் கொண்டு வருவது பொருத்தமான விடயமல்லவெனத் தெரிவித்த வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அரசு தீர்மானிக்கும் விடயத்தை தமிழ் மக்களிடம் திணித்து, தமிழ் மக்களின் வரலாற்றை திரிவுபடுத்தும் செயற்பாடாகவே இதனை தான் பார்ப்பதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில், நேற்று (12)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழர்களின், பூர்வீகம், புராதனம் உள்ளிட்ட அனைத்தையும் தொல்பொருள் திணைக்களமே மழுங்கடித்தாகவும் சாடினார்.

வடக்கில், பெரியளவில் வேறு புராதனங்கள் இல்லையெனத் தெரிவித்த அவர், தமிழர்களின் புராதன தொல்பொருள் ஆய்வுகளே கூடுதலாக உள்ளனவெனவும் கூறினார்.

இவற்றை எல்லாம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமானதல்லவெனவும், சிவஞானம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X