2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மாயம்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடற்பரப்பிலிருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று நேற்று (18) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள், ஒரே படகில் சென்ற தந்தையும் மகனும் எனத் தெரிவிக்கப்பட்டுளளது. யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் வசிக்கும் பரமானந்தராசா அருள்ராஜ் வயது (38) மற்றும் சிங்காரவேலு பரமானந்தராசா வயது (59) ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை இரண்டு மணிக்கு, டிங்கிப் படகில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. சம்பவம் தொடர்பில் கடற்படையினரின் உதவியை பருத்தித்துறை பொலிஸார் நாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .