Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 மார்ச் 14 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும், தொழில் நாடுவோர், நாளை (15) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் அலுவலகங்களிலும் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்ட செயலக தொழில் நிலையம், பிரதேச செயலகங்களுடன் இணைந்து தொழில் நாடும் இளையோருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் பிரதேச செயலக ரீதியாக பதிவுகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் வெள்ளிக்கிழமை யாழ்.பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தொழில் நாடுவோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் நாடுவோர் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .