Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
மாற்றுவலுவுடையோருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் ஜெய்பூர் நிறுவனம் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
யாழ். ஜெய்பூர் செயற்கை அவயங்கள் பொருத்தும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 6 ஆம், 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
பயன்பாடற்ற பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்குடன் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை பயனாளிகள் பார்வையிட்டு தாம் விரும்பும் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான இலவச பயிற்சிகளை ஜெய்பூர் நிறுவனம் வழங்கவுள்ளதுடன், பயிற்சி காலத்தின் போது உற்பத்திக்கு தேவையான பொருட்களை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்க உள்ளனர்.
அத்துடன் பயிற்சியின் பின்னர் அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க உள்ளதுடன், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொடுக்க உள்ளனர்.
எனவே கண்காட்சி நடைபெறும் நாட்களில் கண்காட்சியினை பார்வையிட்டு தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜெய்பூர் நிறுவனத்தினர் கோரியுள்ளனர்.
43 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
9 hours ago