2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நீதித்துறை அரசியல்வாதிகளுக்கு அடிபணியக்கூடாது

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கையின் நீதித்துறையானது அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குச் செல்லாமல், சுதந்திரமாகச் செயற்படக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் ஆயர் இல்ல இளையோர் ஆணைக்குழு இயக்குநர் வண.பிதா எம்.வி.ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு, இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு  தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட பிரதேசமாக மாற்றப்படவேண்டும். அதிகாரங்கள் மத்திக்கு மாத்திரம் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். தமிழர்களுக்கான முறைமையொன்று இருக்கவேண்டும். இன ஒற்றுமை ஏற்படுத்தப்படவேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசங்கள் விடுவிக்கப்படவேண்டும். தமிழர்களின் தேசியம் காக்கப்பட வேண்டும், அரசாங்கத்துக்கும்  தமிழர் பிரதிநிதிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படுகின்றன எந்த ஒப்பந்தமும் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X