2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றினை அவமதித்தவருக்கு அபராதம்

Gavitha   / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வழித்தட அனுமதிபத்திரம் இருப்பதாக கூறி, நீதிமன்றத்தை அவமதித்த வாகன உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிநி நந்தசேகரன் புதன்கிழமை (09) தீர்ப்பளித்தார்.

வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணம் - கொடிகாமம் பயணிகள் சேவையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொடிகாமம் பொலிஸாரால் பஸ் ஒன்று கடந்த வாரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

புதன்கிழமை (09) வாகன உரிமையாளரை நீதிமன்றில் முற்படுத்திய போது, வழித்தட அனுமதிபத்திரம் இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

நீதவான் பத்திரத்தை பரிசீலித்த போது, வாகனம் கைப்பற்றப்பட்டதற்கு மறுநாள் குறித்த வழித்தடம் பெற்றிருந்தமை தெரியவந்தது.

இதன்போது நீதவான் நீதிமன்றினை அவமதித்ததற்காக 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதவான், வழித்தட அனுமதிபத்திரம் இன்றி கொழும்பு- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட சாரதிக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .