2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நான் ஆசையுடன் பேசும் என் தமிழில் குற்றமா? கவலைபடமாட்டேன் என்கிறார் ஆளுநர்

George   / 2016 மே 19 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'நான் கொழும்பில் பிறந்து வளந்தவன். அந்தவகையில் எனது தமிழ் உச்சரிப்பு என்பது வடக்கு மக்களின் தமிழ் உச்சரிப்புக்கு நிகரானதாக காணப்படுவதில்லை. இருந்தும் நான் தமிழில் பேசுகிறேன். எனது தமிழ் உச்சரிப்பு தொடர்பில் ஊடகங்கள் குற்றம் கண்டுபிடிக்கின்றார்கள்' என வடமாகாண ஆளுனர் ரெஜினல்ட் கூரே தெரிவித்தார்.

நீர்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சின் நீர்வள சபையின் வடக்கு மாகாண அலுவலகம் யாழ். பிரதான வீதியில் வியாழக்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய ஆளுநர், தொடர்ந்து தமிழில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், 'ஆசையுடனும், கடமையாற்றும் பிரதேச மொழி என்ற ரீதியிலும் தமிழில் பேசுகிறேன். எனது தமிழில், ஊடகங்கள் குற்றம் பிடித்து அதனை பிரசுரிக்கின்றனர். நான் கூறும் விடயங்களின் உண்மையை பிரசுரிப்பதில்லை. ஆனால் அதைப் பற்றி நான்  கவலைப்படமாட்டேன்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X