2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நியூசிலாந்து செல்ல மனமற்ற முதியவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Gavitha   / 2016 ஜனவரி 04 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நியூசிலாந்திலிருந்து இலங்கைக்குத் திரும்பிய இலங்கைப் பிரஜையொருவர், மீண்டும் அந்நாட்டுக்குச்  செல்ல மனமில்லாமல் இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (02) கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்  கொக்குவில், நந்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், கொக்குவில் கிழக்கு, கல்லூரி ஒழங்கையைச் சேர்ந்த சபாபதி பாலசுப்பிரமணியம் (வயது 80) என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

உறவினர்களை பார்ப்பதற்காக, குறித்த முதியவர் தனது குடும்பத்தாருடன் இலங்கைக்கு வந்துள்ளார். வந்தவருக்கோ மீண்டும் நியூசிலாந்துக்குச் செல்ல மனமில்லை. இதனால் மனைவி மகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) நியூசிலாந்துக்குச் செல்லிவிருந்த நிலையில், சனிக்கிழமை (02) கோயிலுக்குச் சென்று வருவதாக, கூறிவிட்டுச் சென்றவர், இரவு 11 மணியாகியும் வீடு திரும்பவில்லை. நீண்ட நேர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், நந்தாவில் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து அவரை சடலமாக மீட்டுள்ளனர்.

மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X