2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நியாயமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

வெங்காயம், மிளகாய், நெல் போன்றவற்றை பயிரிட்டவர்கள் அதற்கான சந்தை வாய்;ப்பும் நியாயமான விலையும் கிடைக்காமையால், பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பண்டத்தரிப்பு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.செல்வரட்ணம் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

'பண்டத்தரிப்பிலும் அதனை சூழவுள்ள கிராமங்களிலும் பெரும்பாலான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் விவசாயத் தேவைக்கான உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு 10 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்தே நவாலிப் விவசாய திணைக்களத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பணமும் நேரமும் விரயமாகின்றது.

இவர்கள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாய விலையானது கிடைக்காமையால் தாங்களுக்கான பலன் கிடைக்கவில்லையென அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X