2025 ஜூலை 16, புதன்கிழமை

நோயாளர் காவு வண்டி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

துணுக்காய் தேறாங்கண்டல் பகுதியிலுள்ள பாலம் சேதமடைந்துள்ளதால் ஐயன்குளம் மருத்துவமனையில் இருந்து மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர்களைக் கொண்டு செல்லும் அம்புலன்ஸ் வண்டியானது 25 கிலோமீற்றர் அதிகமான தூரம் பயணித்து மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

ஐயன்குளம் மருத்துமனையிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் மல்லாவி வைத்தியசாலை இருக்கின்றனது.இப் பாலம் உடைந்தமையால் இந்தப் பாதையூடாகப் பயணிக்க முடியாமையால், ஐயன்குளத்திலிருந்து புறப்படும் நோயாளர் காவு வண்டி, புத்துவெட்டுவான், கொக்காவில் வழியாக 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மாங்குளம் மருத்துவமனைக்கு நோயாளர்களைக் கொண்டு செல்கின்றது.

தேராங்கண்டல் பகுதியிலுள்ள மேற்படி பாலம் கடந்த ஐந்தாண்டுகளாக புனரமைக்கப்படாமலுள்ளது. துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரிகள் இப்பாலத்தினை புனரமைத்துத் தருவதாக பலதடவைகள் கூறியபோதிலும் இப்பாலம் புனரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக ஐயன்கன்குளத்திலுள்ள 210 குடும்பங்களும் பழைய முறிகண்டியிலுள்ள 38 குடும்பங்களும் புத்துவெட்டுவானிலுள்ள 77 குடும்பங்களும் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .