2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு

Niroshini   / 2016 மே 10 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

கொழும்பு சமய கலாசார அமையத்தால் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம மக்களின் குடிநீர் பற்றாக்குறையை நீக்கும் முகமாக 15 நீர்த்தாங்கிகள் திங்கட்கிழமை (09) வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டன.

வைத்தீஸ்வராக் கல்லூரி, கொட்டடி, நாவாந்துறை சென்.நீக்கிலஸ், சூரியவெளி ஆகிய சனசமூக நிலையங்கள், பொம்மைவெளி முன்பள்ளி மற்றும் பொதுநிறுவனங்களுக்காக இந்த நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளான எம்.எம்.எம்.நிபாஹிர், மொஹமட் அஜ்மல், கலாநிதி நா.தனேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X