2025 ஜூலை 05, சனிக்கிழமை

நீர் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்றிட்டம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

நீர் மூலம் பரவும் வயிற்றோட்டம், நெருப்புக்காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரித்து வருவதையடுத்து சண்டிலிப்பாய் சுகாதார வைத்தியதிகாரி நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் இம்மாதம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார வைத்தியதிகாரி ஜீ.றஜீவ் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை மத்திய சுகாதார அமைச்சின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது.

தற்போது, மழை காலம் ஆரம்பித்துள்ளமையால், மேற்படிப சுகாதார வைத்தியதிகாரி பிரிவின் கீழுள்ள காக்கைதீவு, ஆனைக்கோட்டை மற்றும் சுதுமலை ஆகிய இடங்களில் வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

இந்நோய்கள் பற்றி பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுவதால் இந்தச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

பாடசாலைகள், சனசமூக நிலையங்கள் போன்ற பொது இடங்களில் அறிவூட்டல் கருத்தரங்குகளை நடத்துவதற்கும் ஒலிபெருக்கு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கும் நோய்கள் தொடர்பான கையேடுகளை விநியோகிப்பதிலும் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினர் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இந்தப் பகுதியில் அமைந்துள்ள உணவு கையாளும் நிறுவனங்களிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .