Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 01 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த வருடம் மீள்குடியேறிய மீனவ குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் புதன்கிழமை (01) வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோர் ஹாட்றென் கலந்து கொண்டு மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.
நோர்வே அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் 'ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்ந்தோருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குதல்' எனும் செயற்றிட்டத்தின் கீழ் வளலாய் வடக்கில் மீளக்குடியமர்ந்த மீனவக்குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
4குடும்பங்களுக்கு 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 படகுகளும் நான்கு வெளியிணைப்பு இயந்திரங்கள், மேலும் 6 பேருக்கு வெளியிணைப்பு இயந்திரங்களும் 30 மீனவர்களுக்கு கட்டுமரங்கள் மற்றும் உயிர்காப்பு அங்கி என்பன வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், வட மாகாண மேலதிக செயலாளர் அ.பத்திநாதன், கோப்பாய் பிரதேச செயலாளர் மருதுலிங்கம் பிரதீபன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கனகராஜா ஸ்ரீ மோகனன், கடற்றொழில் நீரியல்வளதுறை திணைக்கள மாவட்ட உதவிபணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago